அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று ( 29-03-2012 ) நடைபெற்ற 11 ஆம் ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் சகோ. ஜனாப் அப்துல் ரெஜாக், பள்ளியின் நிர்வாகி சகோ. ஜனாப் பஷிர் அஹமது, பள்ளியின் முதல்வர் லட்சுமி ப்ரியா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
சிறப்பு விருந்தினராக ஜனாப் சகோ. அன்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி, பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது கூடுதல் சிறப்பாகும்.
ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Responses So Far: