சவுதியிலிருந்து கல்விக்கு உதவும் தமிழ் தன்னார்வல அமைப்பு (MEPCO) 0

அதிரை பிரஸ் | 05:29 |


கடந்த இருபது வருடமாக ஜித்தாவில் தமிழ் நாட்டு தன்னார்வலர்களால் செயல்படுத்தப் பட்டு வரும் மெப்கோ (MUSLIM EDUCATIONAL PROMOTION COUNSEL)என்ற அமைப்பு, நலிவுற்ற, நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு. நிதியுதவி செய்து அவர்களை சிறந்த கல்வியாளர்களாக, உருவாக்கிவருகிறது. அந்த வகையில் சுமார் நூற்றுக்கணக்கான பொரியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் தொழில் சார்பு கல்வியாளர்களை இவ்வமைப்பு உறுவாக்கியுள்ளது,

மேலும், சவுதி அரேபியா ஜித்தாவில், மாணவர்களுக்கிடையே, கல்வி சார்ந்த போட்டிகள், மேற்படிப்புக்கு செல்ல தயாராக இருக்கும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது,

இந்நிலையில் கடந்த(02.03.2012) வெள்ளியன்று இவ்வமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அந்த வகையில்,ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தவிற்த்து முக்கிய நிர்வாகிகளாக பரமக்குடியை சார்ந்த சகோ.ஜனாப்.நூருல் அமீன் (NCB) ஜெனரல் செகரட்டரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும், பல வருடங்கள் புரமோசன் கவுன்சிலின் சேர்மனாக இருந்த அதிரையை சார்ந்த சகோ. ரஃபியா அவர்கள் டெபுட்டி பிரசிடென்ட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மர்ஹூம் மாலிக்பாய் அவர்கள்,ஜனாப்.லியாகத், டாக்டர்.பஷீர் போன்றோர்கள் அலங்கரித்த உயர் பதவி பெற்றிருக்கும் நமதூர் சகோதரர் ரஃபியா அவர்களை வாழ்த்துவோமாக.

0 Responses So Far: